ஒரு சிறு அறிவிப்பு!

எனது ஆடியோ வீடியோ (ஒலி ஒளி) ஓசை வலைப்பூ மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது என்ற தகவலை மகிழ்ச்சியிடன் அறிவித்துக்கொள்கிறேன்! தள முகவரி: http://osai.tamil.net

பிரணாப் --ராஜபக்ஷே சந்திப்பின் மர்மம் --ஒரு கற்பனையான நிஜ உரையாடல்


( சேகர்ஜி அவர்கள் தமிழகத்தின் ஒரு முக்கிய பி.ஜெ.பி பிரமுகர் - அவரிடம் இருந்து சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சலை இங்கே பிரசுரிக்கிறேன்! )



பிரணாப் முகர்ஜி என்ற எலியும் ராஜபக்ஷே என்ற புலியும்... இல்லை ...இல்லை புலிகளின் எதிரியும் சென்ற வாரம் கொழும்பில் சந்தித்து பேசினார்கள் .அவர்கள் என்னதான் பேசினார்கள்? அதன் மர்மம் தான் என்ன? இந்த உரையாடல் கற்பனையாக இருக்கலாம். ஆனால் நிஜங்களின் வெளிப்பாடு.
நேராக ஏர்போர்ட்டிலிருந்து பிராணாப் அதிபர் மாளிகைக்குள் நுழைகிறார். ராஜபக்ஷே " வாங்க... வாங்க" என்று கை நீட்டுகிறார்.
ராஜபக்ஷே: வாங்க ப்ரனாப்ஜி ......வணக்கம்...ஒங்க கையைகுடுங்க ....இல்லாட்டி நாம பிறந்ட்சுன்னு கலைஞர் ஒத்துக்க மாட்டார்.

பிரணாப்: அட போங்க சார் ...நாங் கை கொடுப்பது இருக்கட்டும்....போன மாசம் இங்கு வந்த கனிமொழி " பொக்கே "கொடுத்து ஒன்குல்லுகு கை கொடுத்தாங்களே...

ராஜ பக்ஷே: அதனால் நீங்க கை கொடுப்பதை கலிஞர் தப்பா நினைச்சுக்க மாட்டார்.. சும்மா கைய நீட்டுங்க

பிரணாப் : நாங்க குடுத்த ஆயிரன்கோடிய தமிழர்கள் தப்பிச்சு போகாம இருக்க நல்லா முள் வெளியெல்லாம் போட்டுடீங்களா?

பக்ஷே: ஒரு பய்சா ஊழலில்லாம அத்தன பணத்துக்கும் வேலி போட்டுட்டம் ....இருந்தாலும் ஒங்க வை.கோவும் ராம தாசும் தான் தமிழர்களுக்கு பாது காப்பிலைன்னு தெரியாம பேசறாங்க. எவ்வளவு பாதுகாப்பா முள் வேலிக்குள்ள அடச்சு வச்சுருக்கம் தெரியுமா?

பிரணாப்: அவங்க கெடக்குறாங்க .இப்படிதான் பேசுவாங்க ...பின்னாலேயே கூட்டணிக்கு அலைவாங்க ...அது சரி ..இன்னும் எதாவது நிதி வேணுமா?

பக்ஷே: வேணாம்னு சொல்லுவமா? இந்த முள் வெளிய தாண்டியும் சிலர் ஓடிபோயிடறாங்க .இதுக்கு மேல் ஒரு வேலி போட இன்னும் அறநூறு கோடி குடுங்க ..ஒரு பய ஓடாம நாங்க பாத்துகிறோம். அதுசரி கலைஞர் எங்களுக்கு ஒதவ எதோ சொன்னாராமே?

பிரணாப்: அவர் பேச்ச விடுங்க.. அவர் தொல்ல தாங்க முடியாம தான் இங்க வந்திருக்கேன். ஒங்க சுப்ஜட்டுக்கு வர்றேன் ஒங்க பொன்சேகா எப்படி இருக்கார்?

பக்ஷே : அவரா? அவரு ஒங்க ஊரு ஜஸ்வந்த் சிங் மாதிரி. அவரு எழுதிக்கெட்டார். இவரு பேசி கேடறார். என்ன எதுத்து போட்டிபோட போறாராம் சோனியா அம்மாதான் எனக்கு ஒதவனும்.

பிரணாப்: நீங்க கேக்கவே வேண்டாம்.. ஒங்களுக்கு ஒதவுவதுதான் எங்களுக்கு முக்கியம். ஏற்க்கனவே சோனியா அம்மாதான் புலிகளை அடக்க ஒங்க மிலிடரிக்கு " ராடார்"லாம் அனிப்ச்சாங்க .இப்ப ஊன்னு ஒரு வார்த்த சொல்லுங்க . அன்னைக்கு அமைதிப்படை அணிப்ப்ச்ச மாதிரி மறுபடியும் படை அனுப்பரம்
.
பக்ஷே: அதுசரி எங்க ஆளுங்க யார் வந்தாலும் தமிழ் நாட்டல கருப்புக்கொடி காட்டி பயமுர்த்ரான்களே .இந்த கருணாநிதிய கொஞ்சம் கண்டிச்சு வைக்ககூடாதா?

பிரணாப்: அடப்போங்க கர்ணாநிதி இப்ப ஒங்களோட ரொம்ப இணக்கமா இருக்கிறதா சொல்றாங்களே..

பக்ஷே: அது சரிதான்.... ஆனாலும் அணில் விக்கிரம சிங்கே ,,, அவங்க தங்கச்சி இவங்கல்லாம் தமிழ் நாட்டுக்கு சாமி கும்ட வந்தப்ப கருப்பு கோடி காட்டுனது தான் மனசுக்கு வருத்தம்...

ப்ரன்னப்: நீங்ககூடத்தன் திருப்பதிக்கு வந்தீங்க , ,தமிழர்களை சப்ஜாடா அழிச்சதுக்கு நேர்த்திகடன் செய்ய வந்தீங்க.. நாங்க எப்பிடி விதிஎல்லாம் மீறி ஒங்களுக்கு ராஜோபசாரம் செஞ்சோம் ...

பகேஷே பின்ன ஏன் கலைஞர் மட்டும் அப்படி நடந்துகிட்டார்...

பிரணாப்: நீங்க சும்மா வந்திருந்தா காம்சுருக்க மாட்டார்.. சாமி கும்ட வந்ததால தான் கோபிசுகிட்டு கருப்பு கொடி காம்பிசுருப்பார் ..ரணில் ஒங்க எதிரிக்கட்சி ஆளாச்சே ஒங்களுக்கு அவர்மேல் ஏன் பாசம்? ..

பகேஷே என்ன இருந்தாலும் நாங்க ஒரே இனம்ல.

பிரணாப்: அப்படி சொல்லாதீங்க... எங்களுக்கும் உண்டு இனப்பாசம் . நேரு குடும்பதுமேல இருக்கிற பாசத்தால தான் நாங்க சோனியாவ ஏத்துகிட்டோம்

பக்ஷே: அதுசரி ஒங்கள்ட்ட ஒரு ஆலோசனை கேக்கணும் ...அரசியல் எதிரிகளை அழிப்பதில் இந்தியாவிலேயே நீங்கதான் முன்னணியில் இருக்கிறீங்களாமே ..

பிரணாப் [: (இடைமறித்து..) அப்படி சொல்லாதீங்க.. இந்த விஷத்தில் நாங்க ஒங்களுக்கு ஜூனியர்தான் விடுதளைப்புளின்க்ரா பெரில் எல்லா தமிழனையும் கூண்டோடு ஒழித்த ஒன்கமுன்னால நாங்க ரொம்ப சின்ன ஆளுங்கதான்.

பக்ஷே: ( தொடர்ந்து) இந்த பொன்சேகாவை எப்படி குளோஸ் பண்றது..?

பிரணாப்: அது ரொம்ப சுலபம் .. ஒங்க ஊர்ல லாரிகளே இல்லையா? ஏத்திட வேண்டியதுதான்

பக்ஷே மூக்கில் விரல்வைத்து பிரணாப்பை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்.. பிரணாப் தொடர்கிறார்... இப்படிதான் இந்திரா காந்தி அம்மா --நகர்வாலா என்று ஆரம்பித்து பக்ஷே காதில் குசுகுசுக்கிறார்.. என்ன வாலா...என்ன வாலா.என பக்ஷே கேட்பதுமட்டும் காதில் விழுகிறது..

பாஷே : அவ்வளவு சுலபமா? சரி நான் பாத்துகிறேன் .ஊருக்கு போனபிறகு பத்திரிக்கை காரன்லாம் நீங்க என்னோட என்ன பேசினீங்கன்னு கேட்டா என்ன சொல்வீங்க.

பிரணாப்: எதுக்கு கேக்றீங்க?

பக்ஷே: நாம ஒரேய்மாரி பொய்யை சொல்லன்னும்மில்ல ..இப்பயே பேசிக்க்ட்டாதான நல்லது

பிரணாப்: அதுக்கா...நல்லெண்ண நிமித்தமா சந்திச்சம்.. தமிழர்களை சீக்கிரமா ஊருக்கு...

பக்ஷே:( இடைமறித்து.. ) ஊருக்கா?... உலகத்தைவிட்டேவா? ...


பிரணாப்: என்ன பக்ஷே சார்... அப்படி எல்லாம் முழு உண்மையும் சொல்லமுடியுமா? அதனால ..அவங்.. அவங்க.. ஊருக்கு அனுப்ப இந்தியா வேண்டிக்கொண்டது.. என சொல்லவேண்டியதுதான்..

பாக்ஸ்: அப்பரம் ஒரு விஷயம்.. இந்த இந்திய மீனவர்கலேல்லாம் அடிக்கடி எங்க எல்லைக்கப்பால் உங்க எல்லைக்குள்ளேயே மீன் பிடிக்கிறாங்க.எவ்வளவு சுட முடியுமோ அவ்வளவு சுடரம்.. கொஞ்சம் ஏமாளிகளை பிடித்து முடித்தவரை டார்ச்சர் செய்றம் .
...
பிரணாப் ஏன் ( அப்பாவியாக )

பக்ஷே: விடுதலை புலியெல்லாம் முடிச்சாச்சு ..மீதியுள்ள தமிழர்களை பிடிச்சு முள் வேலிக்குள்ள போட்டாச்சு.. எங்களுக்கு வேற வேலை வேண்டாமா?

பிரணாப்: அதனால்..

பக்ஷே: அதனால்..இந்திய மீனவர்கள் இனிமே மீன் பிடிக்கவே போக சொல்லாதீங்க ..அப்பரம் ..அது...இது..ன்னு ஒங்க ஆளெல்லாம் பேசசொல்லாதீங்க..குறிப்பா ஒங்க ராணுவ மந்திரி அந்தோணி கிட்ட சொல்லி ஒங்க கடற்ப்படைக்கு லீவு குடுக்க சொல்லுங்க.. என்ன சரியா?

பிரணாப்: ஏற்க்கனவே சோனியா அம்மா உத்தரவு போட்டாச்சு..

பக்ஷே: ( அதிர்ச்சியுடன் ) என்ன உத்தரவா?எதுக்கு.. எங்குளுக்கு எதிராவா?

பிரணாப்: ஹி ..ஹி..ஹி.. அபிடீல்லாம் செய்வோமா..

பக்ஷே: அப்புறம் பின்ன என்ன ?

பிரணாப்: கடற்ப்படை கரை விட்டு கடலுக்குள் வரக்கூடாது.. அப்படியே வந்தாலும் கப்பலை விட்டு வெளியே வரகூடாது அப்படி கப்பலில் இருந்து எட்டிப்பார்த்தாலும் பைனாகுலார்ல ஒங்க கடற்படை செய்யும் அகரமங்களை பார்த்தும் பார்க்காமல் இருக்கணும்னு உத்தரவு போட்டுடுச்சு

பக்ஷே: சபாஷ்.. உங்களது விஜயம் இப்பதான் நல்லெண்ண விஜயமாச்சு... இதேமாரி பொன்சேகாவும் ரணிலும் என்னோட இருந்திட்டா நாதான் நிரந்தர ஜனாதிபதி ஒ.கே பிரணாப். நல்லா சாப்டுட்டு அடுத்த பிளைட்டில் பத்ரமா ஊருக்கு பொய் சேருங்க என் தம்பிய ஏர்போர்ட்டுக்கு வரசொல்லி வழி அனுப்பிவைக்கிறேன்.

பிரணாப்: ரொம்ப தாங்க்ஸ் ..

பக்ஷே.. ஒன் மினிட் ப்ரனாப்ஜி ..கல்கத்தா போகும்போது ரொம்ப ஜாக்கிரதை போங்க. அங்க எங்க ஊரு புலிகள்ட பயிசிபெட்ட்ற நக்சல்கள் இருக்காங்களாமே
என்ன கேர்புல்லா இருப்பீங்களா?

பிரணாப்:(பயத்துடன்) போறப்ப ஏன் கிலெய உண்டாகிறீங்க (மனதுக்குள் முனுமுனுதுக்கொண்டு ) இருக்கும்... இருக்கும்... புலிகளை அழித்த திமிருல்ல

--
எஸ்.ஆர்.சேகர்

ஃபேஸ்புக்கில் எனது பிறந்தநாளன்று ....

நான் இப்பொழுது வலைப்பதிவுகளை விட தற்சமயம் அதிகம் உலவுவது சோசியல் மீடியா வில் தலையாய இடத்தை பிடித்துள்ள ஃபேஸ்புக்! இங்கு எனது பிறந்தநாள் அன்று என்ன நடந்தது தெரியுமா? கீழே உள்ள யூடியூப் படத்தப் பாருங்க புரியும்! இதுவரை இந்த முகப்புத்தகத்தை புரட்டிப்படிக்காமல், பார்க்காமல் இருப்பவரா நீங்கள்? உடனே உங்க இடத்தை துண்டு போட்டு ரிசர்வ் செய்துவிடுங்கள்! என் முகவரி http://www.facebook.com/osaichella ! சரி படத்தை பாருங்க மக்கா!


Blog Widget by LinkWithin

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு